பிரதமரா இருந்துகிட்டு பொய் பேசக்கூடாது..! – அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (08:57 IST)
கொரோனா காலத்தில் தொழிலாளர்கள் புலம் பெயர்ந்தது குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் மக்களவை கூட்டத்தில் பிரதமர் மோடி கொரோனா முதல் அலை குறித்து பேசிய போது, கொரோனா பரவலின்போது தொழிலாளர்களை புலம்பெயர காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தூண்டி விட்டதாகவும், ரயில் டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்து தந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் டெல்லியிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் டெல்லியை விட்டு செல்ல வேண்டும் என்றும் அம்மாநில அரசு கூறியதுடன், பேருந்துகளை ஏற்பாடு செய்து தந்ததாகவும், இவ்வாறு புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பப்பட்டதால்தான் பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் முதல் அலையின்போது கொரோனா அதிகரித்ததகாவும் பேசியுள்ளார்.

இதற்கு ட்விட்டர் வாயிலாக பதிலளித்து பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “பிரதமரின் இந்த அறிக்கை அப்பட்டமான பொய். கொரோனா காலத்தின் வலியால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அன்புக் குரியவர்களை இழந்தவர்கள் குறித்து பிரதமர் உணர்வார் என்று நாடு நம்புகிறது. இது பிரதமருக்கு ஏற்புடையதல்ல. இது மக்களின் துன்பங்களை வைத்து செய்யப்படும் அரசியல்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்