இது சிபிஐ கஸ்டடி இல்லை, பாஜக கஸ்டடி: கவிதா ஆவேசம்

Siva
திங்கள், 15 ஏப்ரல் 2024 (15:23 IST)
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா இது சிபிஐ கஸ்டடி அல்ல பாஜக கஸ்டடி என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார் 
 
கடந்த மார்ச் 15ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கவிதா காவலில் எடுத்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அவர் டெல்லி திகார் திரையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மீண்டும் அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார் 
 
அவருடைய காவல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நீதிமன்ற வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது இது சிபிஐ கஸ்டடி இல்லை, பாஜக கஸ்டடி என்றும், பாஜக வெளியில என்ன பேசுகிறதோ அதை சிபிஐல் உள்ளே வந்து கேட்கிறது என்று கூறினார்  
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்