பெங்களூரில் சில நாட்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்திற்கு மர்ம நபர்கள் குண்டு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து தீவிர விசாரணை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட இருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கைது செய்யப்பட்டவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முசபீர் உசேன் மற்றும் அப்துல் ஹுசைன் என்பதும் இருவரும் தான் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது
மேலும் இருவரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும் போலி ஆதார் அட்டை மூலம் கிரிப்டோகரன்சி கணக்குகளை தொடங்கி அதன் மூலம் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பணம் பெற்றுள்ளதாகவும் தெரிகிறது
சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருவரும் மாறி மாறி தஞ்சம் புகுந்த நிலையில் கொல்கத்தா அருகே இருவரும் பதுங்கி இருந்தபோது என்ஏஐ அதிகாரிகள் கைது செய்ததாகவும் தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது