ஆனால் பாரதிய ஜனதாவோ அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சிபிஐ ஆகிய அமைப்புகளுடன் தான் கூட்டணி வைத்துள்ளது என்றும் அவர் விமர்சனம் செய்தார். எதிர்க்கட்சித்த தலைவர்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்றால் பாஜகவில் உள்ளவர்கள் எல்லோரும் புனிதர்களா? குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் குற்றவாளி அல்ல. நீதிபதி தீர்ப்புக்கு பிறகுதான் குற்றவாளி என்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் தேறினார்
தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் தராமல் மோடி அரசு வஞ்சித்து வருகிறது என்றும் வரி மீது வரி விதித்து மக்களை சோதனைக்கு உள்ளாக்கி வருகிறது என்றும் கூறினார். மேலு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வரிக்கு வரி விதிக்கும் முறையை ஒழித்து விடுவோம் என்றும் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.