புலித்தோல் போத்திய நாய் – விவசாயியின் நூதன யோசனை !

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (16:21 IST)
கர்நாடகாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது தோட்டத்துக்கு வரும் குரங்குகளை விரட்ட தனது நாய்க்கு புலி வேஷம் கட்டியுள்ளார்.

கர்நாடகாவின் சிவமொகா மாவட்டத்தின் தீர்த்தஹள்ளி தாலுகாவில் உள்ள நளூரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் கவுடா என்ற விவசாயி. இவர் மலையோரம் உள்ள தனது நிலங்களில் காபி மற்றும் அரக்கு ஆகியற்றைப் பயிரிட்டுள்ளார். குரங்குகளின் தொல்லை காரணமாக இவரது வயல்கள் விளைச்சல் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குரங்குகளைத் தடுக்க அவர் பல யுக்திகளைக் கையாண்டாலும் எதுவும் கைகொடுக்கவில்லை.

இதையடுத்து தனது வளர்ப்பு நாயின் மேல் புலிகளைப் போல ஆங்காங்கே கருப்பு மையினால் கோடுகளைத் தீட்டி வயல்வெளிகளில் உலவ விட்டுள்ளார். இதைப் பார்த்த குரங்குகள் புலி உலவுவதாக நினைத்து அந்தப் பக்கம் வரத் தயங்கியுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்