ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகன் கார் விபத்தில் பலி

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2018 (08:19 IST)
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகன் ஹரிகிருஷ்ணா கார்விபத்தில் பலியானார்.
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகனும், ஜீனியர் என்.டி.ஆரின் தந்தையும், நடிகரும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவருமான ஹரிகிருஷ்ணா நல்கொண்டா என்ற பகுதியில் இன்று காலை காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் சென்ற கார் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியது. இதில் ஹரிகிருஷ்ணா படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவு ஆந்திராவில் பெரும் கலக்கத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்