இஷ்டத்துக்கு விடுமுறை; உருது மொழி கட்டாயம்! – அரசுக்கு தெரியாமல் ஆட்டம்போட்ட பள்ளிகள்!

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (14:54 IST)
ஜார்கண்ட் மாநிலத்தில் அரசின் வழிகாட்டுதல் இல்லாமலே பள்ளிகள் பல தங்கள் விருப்பம்போல விடுமுறை அளித்ததும், உருது மொழியை கட்டாயமாக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜார்காண்ட் மாநிலத்தில் அரசு பள்ளிகள் அனைத்து பகுதிகளிலும் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் அனைத்திலும் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ற முறை பின்பற்றப்படுகிறது.

ஆனால் ஜார்காண்டின் ஜமத்ரா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

ஜமத்ரா மாவட்டம் மட்டுமல்லாது அம்மாநிலத்தின் ராம்ஹரா, ஹர்வா, டும்கா, கட்டா, பலமும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமையே விடுமுறை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த பகுதிகள் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதி என்பதால் தங்கள் விருப்பத்திற்கு விடுமுறையை மாற்றிக் கொண்டுள்ளனர்.

அதுபோல பள்ளிகளில் காலை நடைபெறும் இறை பிரார்த்தனையையும் இஸ்லாமிய முறைப்படி மண்டியிட்டு வணங்கும் முறைக்கு மாற்றியுள்ளனர். 500க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாநில அரசின் அனுமதி பெறாமலே உருது மொழி பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாநில அரசின் வழிகாட்டுதல்படியே அனைத்து பள்ளிகளும் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளதுடன், விதிமுறைகளை மீறி நடந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், அப்பகுதிகளை சேர்ந்த கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்