ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யவேண்டும் – மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (09:10 IST)
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் இப்போது ஆன்லைன் விளையாட்டு என்ற பெயரில் சூதாட்டங்கள் அதிகமாகி வருகின்றன. இதற்காக விளம்பரங்களில் முன்னணி நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நடித்து மக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்கின்றனர். இந்த விளையாட்டுகளில் இறங்கும் இளைஞர்கள் நாளடைவில் அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை வரை செல்லும் நிகழ்வுகள் கூட நடந்து வருகின்றன.

இந்நிலையில் இதுபோன்ற விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திற்கு எழுதியுள்ள கடித்த்தில், ஆந்திர மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்ட வலைதளங்களை தடை செய்ய Internet Service Providers(ISP) எனப்படும் இணைய சேவை வழங்குனர்களுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இதுபோன்ற நிறுவனங்களின் விளம்பரங்களில் சினிமா நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நடிக்கக் கூடாது என வலியுறுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்