புத்தாண்டு முதல் ஓலா, ஊபரில் பயணிக்கவும் ஜி.எஸ்.டி! – பயணிகள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (15:30 IST)
இந்தியா முழுவதும் புத்தாண்டிலிருந்து ஓலா, ஊபர் போன்றவற்றில் பயணிக்க ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு பொருட்களுக்கும், சேவைகளுக்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமலில் இருந்து வருகிறது. ஜி.எஸ்.டி வரி இல்லாத சேவைகளில் ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து பயணிக்கும் ஓலா, ஊபர் போன்றவை இருந்து வந்தன.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் வருகிற புத்தாண்டு முதல் ஆம்னி பஸ் டிக்கெட், ஓலா, ஊபர் உள்ளிட்ட ஆன்லைன் முன்பதிவு சவாரிகளுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுநாள் வரை ஓலா போன்ற செயலிகள் வழியாக முன்பதிவு செய்து பயணித்தால் எவ்வளவு தூரம் பயணிக்கிறோமோ அதற்கான தொகையை தர வேண்டும். இனி புத்தாண்டு முதல் அந்த தொகையுடன் 5 சதவீதத்தை ஜி.எஸ்.டியாக செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஓலாவில் செயல்படும் ஆட்டோக்களுக்கும் ஜி.எஸ்.டி விதிகள் பொருந்தும். ஆனால் முன்பதிவு செய்யாமல் ஆட்டோவில் பயணிப்பதற்கு ஜி.எஸ்.டி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்