மாநில ஆளுநர் விருதிற்கு சாரண, சாரணியர் குழந்தைகளுக்கு தேர்வுக்கான முகாம்

சனி, 18 டிசம்பர் 2021 (23:25 IST)
பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக கரூர் மாவட்டத்தில்  (18.12.21)  மாநில ஆளுநர் விருதிற்கு சாரண, சாரணியர் குழந்தைகளுக்கு தேர்வுக்கான முகாம் இன்று  புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை ஆணையர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரான திரு மதன்குமார் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆணையர் திரு விஜயேந்திரன் அவர்களின் நெறிக்காட்டுதலில் மாவட்டச் செயலர் திரு ரவிசங்கர் அவர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
 
இத்தேர்வுமுகாமில் சாரணர்களுக்கு *முதன்மை தேர்வாளராக திருப்பூர் மாவட்டத்திலிருந்து திருமதி சுதா லக்ஷ்மி அவர்களும் சாரணியர்களுக்கு  முதன்மை தேர்வாளராக குன்னூர் மாவட்டத்திலிருந்து திருமதி மஞ்சுளா அவர்களும் மாநில சாரண சாரணியர் நிர்வாகத்தின் சார்பாக நியமிக்கப்பட்டிருந்தனர். இத்தேர்வுக்கு கரூர், குளித்தலை  மற்றும் பரணிபார்க் கல்வி மாவட்டங்களிலிருந்து  தேர்வாளர்கள் மாணவர்களை தேர்வு செய்தனர். 
 
இம்மாபெரும் தேர்வுமுகாமில் 150க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச்சார்ந்த  சாரண சாரணியர் பங்குபெற்றனர்.
 
இதற்கு  கரூர் மாவட்ட சாரண சாரணிய நிர்வாகிகளும்  பொறுப்பாளர்களும் சாரண-சாரணிய ஆசிரியர்களும், பள்ளி முதல்வர்களும் உறுதுணையாக இருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்