விசாரணையின்போது எனது வழக்கறிஞரை அனுமதிக்க வேண்டும்: ஜாபர் சாதிக் மனுதாக்கல்.

Mahendran
செவ்வாய், 7 மே 2024 (13:39 IST)
அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு செய்யும்போது தனது வழக்கறிஞரையும் அனுமதிக்க வேண்டும் என டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அமலாக்கத்துறை விசாரணை நடைபெறும் போது, கேள்விகள் கேட்காத தூரத்தில் இருந்து பார்க்கும் வகையில் வழக்கறிஞரை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
 
ஜாபர் சாதிக் மனுவை இன்று பிற்பகல்  விசாரிக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திகார் சிறையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளது.
 
இந்த  நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வழக்கறிஞரை  அனுமதிக்கும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற ஜாபர் சாதிக் கோரிக்கை ஏற்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்