பள்ளத்தை துல்லியமாக கண்டறிந்து பாதையை மாற்றியது ரோவர்: இஸ்ரோ தகவல்..!

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (20:11 IST)
நிலவை தற்போது சுற்றிவரும் பிரக்யான்  ரோவர் பள்ளத்தை துல்லியமாக கண்டறிந்து மாற்றுப்பாதையை ஏற்படுத்திக் கொண்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்தராயன் 3 என்ற விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தர இறங்கி விக்ரம் லேண்டாரை தரை இறக்கியது. அதன் பின்னர் அதிலிருந்து பிரிந்த பிரக்யான்  ரோவர் தற்போது நிலவை ஆய்வு செய்து வருகிறது. 
 
இந்த நிலையில் மேற்பரப்பில் நான்கு மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தை ரோவர் மிகச் சாதுர்யமாக தவிர்த்ததாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பள்ளம் இருக்கும் இடத்திற்கு மூன்று மீட்டர் தூரத்துக்கு முன்பே துல்லியமாக பள்ளத்தை கண்டறிந்து பிறகு பாதையை மாற்றி உள்ளதாகவும் இதனால் பிரக்யான்  ரோவருக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்