விரைவில் நிலாவில் விண்வெளி மையம்! இஸ்ரோவின் அடுத்த நகர்வு! - முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை!

Prasanth Karthick
ஞாயிறு, 28 ஜூலை 2024 (11:37 IST)

இந்திய விண்வெளி மையம் முன்னோக்கி நகர தனியாரின் பங்களிப்பு அவசியம் என இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பேசியுள்ளார்.

 

 

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரையும் கலந்துக் கொண்டார்.

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “நிலவை பற்றிய ஆராய்ச்சியில் அங்கு நீர் இருப்பதையும், மெதுவாக துருவ பகுதியில் சென்று இறங்க முடியும் என்பதை இஸ்ரோ உலகிற்கு காட்டியுள்ளது. தற்போது உலக நாடுகள் எல்லாம் நிலவில் குடியிருப்பு அமைக்க முடியுமா? சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைக்க முடியுமா? என ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

 

இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து செயற்கைக்கோள்களே தயாரித்து வந்தால் அடுத்தக்கட்ட ஆராய்ச்சி மனப்பான்மைக்கு சிரமமானதாக அமையும். அதனால் செயற்கைக்கோள் தயாரிப்பு பணிகளை தனியாருக்கு அளிக்கலாம். இதனால் இந்தியா போல செயற்கைக்கோள்களை பயன்படுத்த விரும்பும் நாடுகளுக்கு தயாரித்து வழங்கும் வாய்ப்பு உருவாகும். ஆராய்ச்சி மனப்பான்மையும், வர்த்தக ரீதியான வாய்ப்புகளும் உருவாகும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்