விண்வெளிக்கு செல்லும் மனிதர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருப்பார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

Siva

வெள்ளி, 5 ஜூலை 2024 (08:26 IST)
விண்வெளிக்கு செல்லும் மனிதர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருக்க வாய்ப்பு உள்ளது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது என்பதும் இதற்காக 9000 கோடி செலவில் ககன்யான் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2025 ஆம் ஆண்டு நான்கு விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என்றும் விண்வெளிக்கு செல்லும் மனிதர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவராக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்தார் .

பிரதமருக்கு பல முக்கிய பொறுப்புகள் இருந்தாலும் விண்வெளி பயிற்சி திட்டத்தில் அவர் இணைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றும் இந்தியாவின் தலைவரை நம்பிக்கையுடன் விண்வெளிக்கு அனுப்பும் திறன் எங்களுக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்