பாபர் மசூதி விவகாரத்தில் நீதிமன்றம் கொடுத்த இடத்தில் மருத்துவமனை – வக்பூ வாரியம் அறிவிப்பு!

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2020 (11:24 IST)
பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் அதற்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது.

நீண்ட ஆண்டுகளாக பிரச்சினையில் இருந்து வந்த அயோத்தி விவகராம் முற்று பெற்று ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கா பணிகள் கோலகலமாய் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கின. இரு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடந்து முடிந்தது. இது சம்மந்தமாக சமூகவலைதளத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

இந்நிலையில் இப்போது அந்த இடத்துக்குப் பதிலாக நீதிமன்றம் வக்பூ வாரியத்துக்கு அளித்த 5 ஏக்கர் நிலத்தில் மருத்துவமனை கட்டப்போவதாக வக்பூ வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்