சந்திரபாபு நாயுடு கைது; நடு ரோட்டில் படுத்த பவன் கல்யாண்! – ஆந்திராவில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (08:36 IST)
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை எதிர்த்து நடிகர் பவன் கல்யாண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.



ஆந்திர முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடுவுக்கும், தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் இடையே அடிக்கடி வார்த்தை மோதல் எழுந்து வருகிறது. இந்நிலையில் பழைய ஊழல் வழக்குகளில் திடீரென சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இது ஜெகன்மோகன் ரெட்டியின் திட்டமிட்ட சதி என தெலுங்கு தேசம் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடுவை காண நடிகர் பவன் கல்யாண் நேற்று இரவு சென்றபோது போலீஸார் அவரை அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் நடிகர் பவன் கல்யாண் நடுரோட்டில் தர்ணா செய்ய ஆரம்பித்ததால் நிலைமை இன்னும் மோசமானது. காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். இந்த தொடர் சம்பவங்கள் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்