பாஜக கூட்டணியில் இணைகிறதா தெலுங்கு தேசம்? ஜேபி நட்டா-சந்திரபாபு நாயுடு சந்திப்பு..!

ஞாயிறு, 4 ஜூன் 2023 (15:38 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் தெலுங்கு தேசம் கட்சி தேர்தல் கூட்டணி அமைக்க வாய்ப்பு  இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவை தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த சந்திப்பு அரை மணி நேரம் நடந்ததாகவும் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறா இருக்கும் தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் தெலுங்கு தேச கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் இதனை அடுத்து அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த  சந்திப்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்