போட்டி போட்டு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கொடுக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு அதிர்ஷ்டம்..!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (07:43 IST)
இந்தியாவுக்கு ஏற்கனவே சலுகை விலையில் கச்சா எண்ணெயே ரஷ்யா கொடுக்கும் நிலையில் தற்போது ஈராக் நாடும் இந்தியாவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணையை கொடுத்த முன்வந்துள்ளது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணையை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் வாங்குவதில்லை. இதனால் இந்தியா மற்றும் சீனாவுக்கு ரஷ்யா குறைந்த விலையில் கச்சா எண்ணையை விற்பனை செய்தது. 
 
இதனை அடுத்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏராளமான கச்சா எண்ணையை ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் வாங்கி உள்ளது. இந்த நிலையில் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணையின் விலை அதிகமாக இருந்த நிலையில் ரஷ்யாவிடம் வந்து மருந்து மட்டுமே அனைத்து கச்சா எண்ணையும் இந்தியா என்ன நிறுவனங்கள் வாங்கின. 
 
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு போட்டியாக ஈராக் நாடும் சலுகை விலையில் கச்சா எண்ணையை இந்தியாவுக்கு தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்