கலாஷேத்ரா விவகாரம்: ஹரி பத்மன் ஜாமின் மனு நிராகரிப்பு!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (07:32 IST)
கலாஷேத்ரா விகாரத்தில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் ஆவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பயின்ற மாணவி ஒருவர் தனக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியதை அடுத்து ஹரி பத்மன் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். 
 
இந்த நிலையில் பேராசிரியர் ஹரிபத்மன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்த நிலையில் நேற்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. ஹரி பத்மனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
 
அரசு தரப்பு வழக்கறிஞர் எழுத்துப்பூர்வமாக கடும் ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து நேற்று இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் ஹரிபத்மன் வெளியே வந்தால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படும் என காவல்துறையினர் விளக்கம் அளிக்க பட்டதை அடுத்து இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து உயர் நீதிமன்றத்தில் ஹரிபத்மன்  ஜாமீன் மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்