கூகுள் நிறுவனத்தில் ரூ.60 லட்சம் சம்பளத்தில் வேலை பெற்ற இந்திய பொறியியல் மாணவி

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (16:44 IST)
பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே கூகுள் நிறுவனத்தில் 60 லட்சம் சம்பளத்தில் இந்திய மாணவி ஒருவருக்கு வேலை கிடைத்துள்ளது 
 
ஆந்திராவை சேர்ந்த பூஜிதா  என்ற பொறியியல் கல்லூரி மாணவி தற்போது இறுதியாண்டு பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது என்றும் அவருக்கு ஆண்டுக்கு ரூபாய் 60 லட்சம் சம்பளம் என்றும் கூறப்படுகிறது
 
இவர் தனது சொந்த முயற்சி காரணமாகவே பொறியியல் படிப்பை முடித்தார் என்றும் அவரே ஒவ்வொரு விஷயங்களும் தேடிப் பெற்று கூகுள் நிறுவனத்தில் விண்ணப்பித்திருந்தார் என்றும் கூறப்படுகிறது
 
இதனையடுத்து மாணவி பூஜிதாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கூகுள் நிறுவனத்தின் பணி அனுபவத்திற்காக அடுத்த வாரம் பணியில் சேர இருப்பதாகவும் தொடர்ந்து அடுத்தடுத்து புதிய முயற்சிகளில் ஈடுபட்டு கூகுள் நிறுவனத்தின் உயர் பதவியை அடைவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்