மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை : சென்னை ஐகோர்ட் உத்தரவு
திங்கள், 9 ஜனவரி 2023 (16:11 IST)
மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த தடை உத்தரவை அனைத்து தரப்பினருக்கும் தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் அறிவித்துள்ளனர்
இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணையில் வேலைநிறுத்த போராட்டம் சட்டவிரோதமானது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.