கல்லூரியில் தேர்வு எழுத அனுமதி மறுப்பு-மாணவி தற்கொலை!

திங்கள், 9 ஜனவரி 2023 (22:45 IST)
கேரள மாநிலம் நடுக்காவு என்ற பகுதியைச்  சேர்ந்த பெண் சென்னையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளமா நிலம் நடுக்காவு என்ற பகுதியைச் சேர்ந்தவர் அனிகா(19). இவர் சென்னையில் உள்ள  ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், வகுப்பிற்குச் சரியாக வரவில்லை என்று கல்லூரி நிர்வாகம் இவரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில், கேரளாவில் உள்ள தன் வீட்டிற்குச் சென்றிருந்த மாணவி அனிகா, தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, பெற்றோர் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். எனவே, போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மாணவியின் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு  செய்து விசாரித்து  வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்