சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 471 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் திடீர் ரத்து: பரபரப்பு தகவல்

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (17:08 IST)
சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 471 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் திடீர் ரத்து
இந்தியா சீனா எல்லையில் சமீபத்தில் இந்திய சீன ராணுவ வீரர்கள் ஆவேசமாக மோதிக்கொண்டதில் இந்திய வீரர்கள் 20 பேர்களும் சீன வீரர்கள் 35 பேரும் பலியானார்கள் என்பது தெரிந்ததே. வீரமரணமடைந்த 20 இந்திய வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த பழனி என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சீன பொருட்களை இனிமேல் வாங்க மாட்டோம் என்றும் சீன செயலிகளை பயன்படுத்த மாட்டோம் என்றும் சீன பொருட்களை இறக்குமதி செய்ய மாட்டோம் என்றும் சமூக வலைதளங்களில் இந்தியர்கள் பலர் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் சீனாவுக்கு வழங்கப்பட்ட ரூபாய் 417 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கான்பூர் - முகல்சராய் ஆகிய நகரங்களுக்கு இடையே ரயில் பாதையில் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிகளை செய்ய சீன நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. இந்த இரு நகரங்களுக்கு இடையே 417 கிலோமீட்டர் தொலைவிற்கு சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிகளை செய்ய சீனாவில் உள்ள பீஜிங் நிறுவனமொன்றுக்கு ஒப்பந்தம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வழங்கப்பட்டிருந்த நிலையில் நான்கு ஆண்டுகளாக குறைந்த சதவீத பணிகளை மட்டும் முடிந்துள்ளதாக தெரிகிறது
 
இந்த நிலையில் முறையான பணிகளை முடிக்காததால் சீன நிறுவனத்தின் ஒப்பந்தத்தை இந்திய ரயில்வே அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலதாமதம் காரணமாகத்தான் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் இந்திய-சீன நாடுகளுக்கு இடையே உள்ள பதட்டம் காரணமாகத்தான் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்