அல்ப காசு குடுத்து அட்டாக் பண்ண ஆள் அனுப்பிய பாகிஸ்தான்! – சுட்டுப்பிடித்த இந்திய ராணுவம்!

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (10:12 IST)
பாகிஸ்தான் கொடுத்த சுமாரான தொகைக்காக இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்த முயன்ற பயங்கரவாதியை இந்திய ராணுவம் பிடித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுறுவல் அதிகம் இருப்பதால் இந்திய ராணுவம் அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது. இந்நிலையில் நவ்ஹேரா ஜங்கர் பகுதியில் ராணுவத்தினர் ரோந்து பணியில் இருந்தபோது அப்பகுதியில் மூன்று பேர் மின்வேலியை துண்டித்து உள்ளே நுழைந்துள்ளனர்.

அப்பகுதியை நோக்கி ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் காயங்களுடன் தப்பி சென்ற நிலையில், படுகாயமடைந்த ஒருவரை பிடித்து ராணுவத்தினர் அவசர முதலுதவி செய்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

அதன்படி பாகிஸ்தானை சேர்ந்த யூனுஸ் சவுத்ரி என்ற ராணுவ அதிகாரி இந்திய மதிப்பில் ரூ.30 ஆயிரம் பணம் கொடுத்து சதி வேலைக்காக இந்தியாவுக்குள் அந்த இளைஞரை அனுப்பியதாக தெரிய வந்துள்ளது. இந்த இளைஞர் ஏற்கனவே கடந்த 2016ல் ஊடுறுவியபோது மன்னிப்பு அளிக்கப்பட்டு திரும்ப அனுப்பப்பட்டவர் என்றும் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்