நம் நாட்டிலுள்ள அசாம் மாநிலத்தில் பிறந்தவர் நய்யார் நூய்ர். இவர் தந்தைக்கு பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னா மீது பற்று இருந்த காரணத்தால், இவரது குடும்பம் கடந்த 1958 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள கராய்ச்சிக்கு குடியேறியது.
பாகிஸ்தான் நாட்டின் நைட்டிங்கேர்ள் என அழைக்கப்பட்ட நய்யாரா நூர், சினிமா பின்புலம் இல்லாத குடும்பத்தில் பிறந்து, தன் திறமையின் மூலம் இசை உலகில் சாதித்த அவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று அவர் காலமானார். அவரது மறைவுக்கு அந்த நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் , சினிமா கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.