இந்திய நாட்டின் தயாரிப்பான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 ஜியை பிஎஸ்என்வி சி-33 ராக்கெட் வினண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
கடல்சார் ஆராய்ச்சி, இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல் வழி போக்குவரத்து உள்பட பல முக்கிய தகவல் தொடர்புகளுக்கு பயன்படும் வண்ணம் இந்த செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஜி செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்பட்டது. கடல்சார் ஆராய்ச்சிக்காக இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் இஸ்ரோ இதுவரை 6 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது.
7-வது மற்றும் கடைசி செயற்கைக்கோளாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஜியை பிஎஸ்எல்வி சி-33 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டு கவுண்டவுன் கடந்த 26ஆம் தேதி தொடங்கியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சரியாக இன்று பிற்பகல் 12.50 மணிக்கு ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஜி செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. 598 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது.
இதனை குறைந்தபட்சம் பூமியில் இருந்து 284 கிலோ மீட்டரும், அதிகபட்சம் 20,657 கிலோ மீட்டர் உயரத்திலும் நிலை நிறுத்தப்பட்டது. இதன் மூலம் ஜி.பி.ஆர்.எஸ் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, ரஷ்யாவை அடுத்து இந்தியாவும் தன்னிறைவு பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.