7 மாதத்திற்குள் 52 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது! – மத்திய சுகாதாரத்துறை தகவல்!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (10:57 IST)
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 52 கோடி பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு முதலாக இருந்து வந்தாலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை கடந்த ஜனவரி 16 முதல் தொடங்கப்பட்டது. முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டினாலும் இரண்டாவது அலைக்கு பின் தடுப்பூசி செலுத்தி கொள்வது அதிகரிக்க தொடங்கியது.

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் 52 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 40,35,96,088 பேர் எனவும், இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர்கள் 11,54,84,436 என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்