உள்நாட்டு விமானப் பயணங்களில் பயணிகள் எண்ணிக்கை உயர்வு!

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (19:07 IST)
உள்நாட்டு விமானப் பயணங்களில் 4.6 லட்சம் பேர் பயணித்ததாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளளது.

கடந்த 2020 ஆம் ஆன்டு கொரொனா தொற்று சீனாவில் இருந்து உலக நாடுகளுக்குப் பரவியது. இதனால், ஊரடங்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனால், விமானப் பயணம் செல்வோருக்கும், வெளியூர் மற்றும்   உள்ளூர் பயணம் செய்வோருக்கும் கடுமையன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

கொரொனா ஊரடங்கு முடிந்த பின்னர், உள்நாட்டு விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி மொத்தம் 2,978 உள் நாட்டு விமான பயணங்களில் 4, 56,082 பேர் பயணம் செய்ததாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்