அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதில் ஆர்வம் காட்டவில்லை என்பது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான விண்ணப்ப குறைவான மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளதிலிருந்து தெரிய வருகிறது.
தமிழகத்திலிருந்து நீட் தேர்வுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகவும் குறைவாக அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வுக்கு கடந்தாண்டு 17,972 அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்து, 12,840 பேர் தேர்வில் பங்கேற்றனர். ஆனால் இந்த ஆண்டு 14,000 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுத போகின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தற்போது மருத்துவ படிப்பை விட பல புதிய படிப்புகள் அறிமுகமானதை அடுத்து அதில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் அதனால் தான் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் ஆர்வம் காட்டவில்லை என்றும் கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.