வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. உடனே தாக்கல் செய்யுங்கள்..!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (07:59 IST)
ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாளாக இருக்கும் நிலையில் 2022-23 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 
 
இதுவரை 6 கோடி பேர் வருமானவரி தாக்கல் செய்துள்ளதாகவும் இதுவரை தாக்கல் செய்யாதவர்கள் உடனடியாக இன்று தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
வருமான வரி தாக்கல் செய்ய காலக்கட்டில் நீடிக்கப்படாது என்றும் இன்றுக்குள் தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதத்துடன் தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் அபராதத்தை தவிர்க்க இன்று இரவுக்குள் தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. 
 
எனவே இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாமல் இருப்பவர்கள் உடனடியாக ஆன்லைன் மூலம் அல்லது ஆடிட்டர் மூலம் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்