மக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கணக்குகள் வைத்துள்ள நிலையில் அவர்களது பெயரில் அவர்களது புகைப்படங்களை பயன்படுத்தி போலி ஐடிக்களை உருவாக்கி நடைபெறும் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறாக போலி ஐடி உருவாக்கும் ஆசாமிகள் ஒரிஜினல் ஐடியில் உள்ளவருடன் நட்பில் உள்ளவர்களிடம் அவர்களை போன்றே தொடர்பு கொண்டு பேசி பண மோசடி செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் உள்ளது.
பொதுமக்களை தாண்டி தற்போது முன்னாள் டிஜிபியையே இந்த மோசடி கும்பல் பாதித்துள்ளது. தமிழக முன்னாள் டிஜிபி ரவி பெயரில் அவரது புகைப்படத்தை கொண்டே மர்ம கும்பல் ஒன்று போலி ஐடி உருவாக்கியுள்ளது. அதன்மூலம் டிஜிபி ரவிக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம் இருந்து பர்னிச்சர் பொருட்களையும் அவர்கள் வாங்கியதாக தெரிய வந்துள்ளது.