ஆந்திராவில் ஆட்சியை பிடிக்கும் ஜெகன்மோகன் ரெட்டி: முடிகிறது சந்திரபாபுநாயுடு ஆட்சி!

Webdunia
ஞாயிறு, 19 மே 2019 (20:07 IST)
இன்று வெளிவந்துள்ள எக்சிட்போல் முடிவுகளின்படி அகில இந்திய அளவில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் ஆந்திராவில் ஆட்சிமாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 100 தொகுதிகளுக்கும் மேல் பெற்று ஆட்சியை அமைக்கும் என்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் சுமார் 50 தொகுதிகள் பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என்றும் எக்சிட்போல் முடிவுகள் தெரிவிக்கின்றன
 
 
அதேபோல் மக்களவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 13-14 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் 10-12 தொகுதிகளிலும் பாஜக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் எக்சிட்போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் ஆந்திராவில் நடிகர் பவன்கல்யாணின் கட்சியும் எதிர்பார்த்த வெற்றியை பெறாது என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன
 
 
ஆந்திராவில் முதல்முறையாக ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அக்கட்சியின் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்