ஆந்திரா, தெலங்கானாவில் இணையதளங்கள் முடக்கம் – மீண்டும் தொடங்கும் ரேன்சம்வேர் வைரஸ் !

சனி, 4 மே 2019 (11:22 IST)
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மின்வாரிய இணையதளங்கள் ரேன்சம்வேர் வைரஸால் முடக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இணையதளங்களை முடக்கி அதன் பின்னர் அதை சரிசெய்ய பணம்பிடுங்கும் ரேன்சம்வேர் எனும் வைரஸ் உலகமெங்கும் பல இடங்களில் அதிகமாகி வருகிறது. இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் இணையதளங்கள் கடந்தகாலத்தில் முடக்கப்பட்டுள்ளன.

அதையடுத்து இப்போது ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களின் மின்வாரிய இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அதனை சரி செய்ய 6 பிட்காயின்கள் (சுமார் 23000) ரூபாய் கேட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து சைபர் பிரிவின் ஆணையர் ‘ இந்த தாக்குதல் எங்கிருந்து நடத்தப்பட்டது எனத் தெரியவில்லை. இப்போது விசாரணை நடைபெற்று வருகிறது.’ எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முடக்கப்பட்ட இணையதளங்கள் சரிசெய்யப்பட்டு மீண்டும் இயங்குவதாகவும் அதில் இருந்து தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை என தெலங்கானா மின்வாரியத்தலைவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்