அசுர வேகத்தில் காற்று, கடல் சீற்றம்... பயம் காட்டும் ஃபானி

வியாழன், 2 மே 2019 (09:53 IST)
வங்கக் கடலில் உருவாகி அதிதீவிர புயலாக மாறியுள்ள ஃபானி புயல் ஓடிசா மாநிலம், கோபால்பூர் - சாந்த்பலி இடையே கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
நாளை பிற்பகலில் இந்த புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு 175 முதல் 185 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இதனால், ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், விஜயநகரம், குண்டூர், பிரகாசம் ஆகிய மாவட்டங்களுக்கும், ஓடிசாவின் கடலோர மாவட்டங்களுளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
புயல் கரையை கடந்தவுடன் ஜகத்சிங்பூர், கட்டாக், குர்தா, ஜாஜ்பூர், பத்ரக், பாலசோர், மயூர்பாஞ்ச் ஆகிய பகுதிகள் வழியாக சென்று மேற்கு வங்காளத்துக்குள் பானி புயல் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மேலும் ஒடிசாவில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி 43-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்