பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்களது பதவியை ராஜினாமா செய்தால் நானும் எனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என கர்நாடக முதல்வர் சித்தராமையாகூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாருக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நில ஒதுக்கீடு புகாரில் மத்திய அமைச்சர் குமாரசாமி ஆகியோர் முதலில் பதவி விலக வேண்டும்.
அவர்கள் வழங்கினால் நானும் முதலமைச்சர் பதவியில் இருந்து விடுதலை விலக தயார் என்று சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
முடா, நில மோசடி தொடர்பாக தன் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என்று பாஜகவினர் கூறியதற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாபதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து பாஜக தரப்பிலிருந்து என்ன விளக்கம் அளிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்