நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்ய கவர்னர் ஒப்புதல் வழங்கியதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது லோக் ஆயுக்தா காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
நில முறைகேடு வழக்கில் சித்தராமைய்யா, அவருடைய மனைவி பார்வதி, மைத்துனர் ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.