ஆர்.கே.நகரில் மீண்டும் போட்டியா? மதுசூதனன் பதில்

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (15:52 IST)
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் தேர்தல் ஆணையம் வரும் டிசம்பர் 31க்குள் ஆர்.கே நகர் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என அறிவித்தது.



 
 
இந்த நிலையில் மீண்டும் ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். எனவே அவரை எதிர்த்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியில் மீண்டும் மதுசூதனன் போட்டியிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுசூதனன், 'ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் துணை முதல் அமைச்சர் விரும்பினால் மீண்டும் போட்டியிட தயார் என்று கூறினார். மேலும் ஒருவேளை போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கட்சி அறிவிக்கும் வேட்பாளருக்காக கழக பணியாற்றுவேன். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஸ்டாலினே போட்டியிட்டாலும் சந்திக்கத் தயார். தினகரன் மீண்டும் போட்டியிட்டால் அவரது நிலை என்ன என்று உங்களுக்கே தெரியும்' என்று மதுசூதனன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்