உலகளவில் அதிக சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தும் நகரம் – இந்தியாவில் ஒன்றே ஒன்று!

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (15:40 IST)
உலகளவில் அதிக சிசிடிவி கேமராக்களைப் பயன்படுத்தும் நகரங்களின் பட்டியலில் ஹைதராபாத் நகரம் 16 ஆவது இடத்தில் உள்ளது.

நவீன காலத்தில் குற்றங்களைக் கண்காணிக்கவும், நடக்காமல் தவிர்க்கவும் போலிஸார் அதிகளவில் சிசிடிவி கேமராக்களை நம்பியுள்ளனர். அதனால் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகமாக உள்ள நகரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உலகளவில் அதிக சிசிடிவி கேமராக்களை பயன்படுத்தும் நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் ஹைதராபாத் 16 ஆவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த கம்பாரிடெக் எனும் நிறுவனம் இந்த ஆய்வை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சீனாவின் தைவான் நகரம் முதலிடத்தில் உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்