உலக அளவில் கொரோனா பாதிப்பு 1.82 கோடி, கொரோனாவில் குணமானோர் 1.14 கோடி பேர்: பரபரப்பு தகவல்

திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (07:38 IST)
உலக அளவில்  1.82 கோடி பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்பதும் அதேபோல் உலக அளவில் கொரோனாவில் இருந்து 1.14 கோடி பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி, மருந்துகள் கண்டுபிடிக்கப்படாமலேயே கொரோனாவால் குணமாகி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் உலகம் முழுவதும் 6.92 லட்சம் பேர் கொரோனா தாக்கி மரணமடைந்துள்ளனர் என்பது சோகத்திற்குரிய ஒரு தகவல் ஆகும்
 
அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் 49,032 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் கொரோனாவிற்கு மொத்தம் 48 லட்சம் பேர் பாதிப்பு என்றும், அமெரிக்காவில் கொரோனாவால் மொத்தம் 1.58,369 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 2,733,677 பேர்கள் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர் என்பதும், ரஷ்யாவில் 850,870 பேர்கள் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர் என்பதும், தென்னாப்பிரிக்காவில் 511,485 பேர்கள் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர் என்பதும், மெக்சிகோவில் 439,046 பேர்கள் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர் என்பதும், பெருவில் 428,850 பேர்கள் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர் என்பதும், சிலி நாட்டில் 359,731 பேர்கள் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர் என்பதும், ஸ்பெயினில் 335,602பேர்கள் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர் என்பதும், கொலம்பியாவில் 317,651 பேர்கள் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவில் 1,804,702 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 38,161 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்