இந்தியாவில் ஜிஎஸ்டி வரிவசூல் புதிய உச்சம்

Webdunia
திங்கள், 1 மே 2023 (21:12 IST)
இந்தியாவில் ஜிஎஸ்டி வரிவசூல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1.87 லட்சத்தை எட்டியுள்ளது.

மத்தியில் பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல்  பாஜக அரசால் ஜிஎஸ்டி வரி வசூல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் ஜிஎஸ்டி வரிவசூல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1.87 லட்சத்தை எட்டியுள்ளது.

கடந்த  ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.167540 கோடி ஜிஎஸ்டி வரி வசூலான நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.19,485 கோடி அதிகாமாக வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வரும் ஆண்டுகள் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கு பாஜக அமைச்சர்கள், மற்றும் அக்கட்சித் தலைவர்கள் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்