அடையாள போராட்டத்தை கைவிடுங்கள்: அமித்ஷா கெஞ்சல்!!

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (11:31 IST)
மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் என அமித்ஷா இந்திய மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசியுள்ளார். 
 
சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனாவால் மருத்துவர் உயிரிழப்பது இது முதலாவது ஆகும். அவரது சடலத்தை அடக்கம் செய்ய கொண்டு சென்ற போது அவரை அங்கு அடக்கம் செய்ய கூடாது என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தடுத்துள்ளனர். மேலும் கற்களை வீசி அவர்கள் தாக்கியதில் ஆம்புலன்ஸ் வாகனம் சேதமடைந்தது.
 
இதையடுத்து கூடுதலாக போலீஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பாக அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு, உடல் அடக்கத்தை எதிர்த்தால் குண்டர் சட்டம் பாயும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடியாக அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு முதல்வரும், துணை முதல்வரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். 
 
இந்நிலையில், அரசு மருத்துவர் கூட்டமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அரசு மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதேபோல மருத்துவர்கள் பலர் கருப்பு நிற பேண்ட் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர் என தெரிகிறது. 
 
இந்நிலையில், இந்திய மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவருடன் அமைச்சர் ஹர்ஷ்வர்தனும் காணொலியில் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும். எனவே அடையாள போராட்டத்தை கைவிடுங்கள் என அமித்ஷா கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்