மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள். – கமல்ஹாசன்

திங்கள், 20 ஏப்ரல் 2020 (18:42 IST)
தமிழகத்தில் இன்று மட்டும் 43 பேர்களுக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1520ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரு மருத்துவர் உள்பட 2 பேர் இன்று உயிரிழந்தனர் என்பதும் இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் தமிழகத்தில் 6109 பேருக்கு இன்று கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதுவரை தமிழகத்தில் மொத்தம் 41,710 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் ,இன்று கொரோனாவில் இருந்து 46 பேர் குணமடைந்து உள்ளதை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 457 கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர் என கூறியுள்ளது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனாவுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்கள் குறித்து ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், கொல்லும் கொரோனா கூட சாதி,மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ,நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து,இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம். பாதுகாப்புக்கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்