கொரோனா ஸ்பெஷல் டாக்டர் விநாயகர்! – கலகலக்கும் விநாயகர் சிலைகள்!

Webdunia
ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (12:05 IST)
ஆகஸ்டு மாதம் தொடங்கியுள்ளதால் விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் செய்யும் பணி தொடங்கியுள்ள நிலையில் கொரோனா ஸ்பெஷல் விநாயகர் சிலைகள் ட்ரெண்டிங் ஆகியுள்ளன.

கடந்த மார்ச் மாதம் முதலாக கொரோனா பாதிப்புகள் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஊரடங்கை மத்திய அரசு விலக்கிக் கொண்டுள்ள நிலையில் விநாயகர் சதுர்த்திக்காக விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் முழு வேகத்தில் தொடங்கியுள்ளன.

ஆகஸ்டு 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான சிலைகள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டில் கொரோனா பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக கொரோனாவை மையப்படுத்தி செய்யப்படும் விநாயகர் சிலைக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸை விநாயகர் காலில் வைத்து மிதித்திருப்பது போன்ற சிலைகள், மற்றொன்றில் விநாயகர் டாக்டர் உடுப்பு போட்டு நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிக்கிறார். அருகே அவரது வாகனமான எலி உதவியாளராக மருந்து பொருட்களை தாங்கி நிற்கிறது. இதுபோன்ற சிலைகளுக்கு மக்களிடையேயும் வரவேற்பு எழுந்துள்ளதால் கொரோனா விநாயகர் சிலைகளுக்கு மார்க்கெட்டில் தேவை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்