படங்களில் வில்லனாய் நடித்தாலும் நிஜ வாழ்வில் மக்கள் மனதில் ஹீரோவாக மாறியுள்ளவர் சோனு சூட். கொரோனா ஊரடங்கின் போது வெளிமாநில தொழிலாளர்கள் ஊர் திரும்ப விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தது, காய்கறி விற்ற ஏழை பெண்ணுக்கு வேலை வாங்கி கொடுத்தது. விவாசாயி ஒருவருக்கு ட்ராக்டர் வாங்கி கொடுத்து உதவியது என இவரது செயல்கள் சமீப காலமாக செய்திகளிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் ஆந்திராவை சேர்ந்த மூன்று குழந்தைகளின் புகைப்படத்தை பதிவிட்டு, அனாதையான அந்த குழந்தைகளுக்கு யாரவது இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு பதிலளித்துள்ள சோனு சூட் “அவர்கள் நீண்ட காலம் அனாதையாக இருக்க போவதில்லை, இனி அவர்கள் என் பொறுப்பில் வளர்வார்கள்” என பதிலளித்துள்ளார்.