நாடு முழுவதும் ஜூலை 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (14:22 IST)
நாடு முழுவதும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை செய்யப்படுவதாகவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது .
 
நாடு முழுவதும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல் மற்றும் விற்பனைக்கு தடை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கைக்கு மக்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்