கேரளாவில் திருநங்கை திருநம்பி காதல் திருமணம்!

Webdunia
வியாழன், 10 மே 2018 (19:01 IST)
கேரள மாநிலத்தில் சூர்யா என்ற திருநங்கையும், இஷான் என்ற திருநம்பியும் காதலித்து சட்டப்படி திருமணம் செய்துக்கொண்டனர்.

 
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த இஷான் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். சூர்யா பெண்ணாக ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர். இவர்கள் இருவரும் நண்பர்களாக அறிமுகமாகி காதலர்களாக மாறினார்கள். 
 
இதைத்தொடர்ந்து இவர்கள் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்து பெற்றோர் சம்மதத்துடன் சட்டப்படி திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களது திருமணம் கோலகலமாக நடைபெற்றது. மேலும் சட்டப்படி நடைப்பெற்ற முதல் பதிவு திருமணம் இவர்களுடையதுதான்.
 
கேரளாவில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்