நீதிமன்றத்தில் வைத்து சுட்டு கொல்லப்பட்ட பெண் பார் கவுன்சில் தலைவர் – ஆக்ராவில் பயங்கரம்

Webdunia
வியாழன், 13 ஜூன் 2019 (13:10 IST)
உத்தர பிரதேச பார் கவுன்சிலின் முதல் பெண் தலைவரான தர்வேஷ் சிங் யாதவ் ஆக்ரா நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவர் தர்வேஷ் சிங் யாதவ். பெண் வழக்கறிஞரான இவர் கடந்த 9ம் தேதியன்றுதான் உத்தர பிரதேச மாநில பார் கவுன்சிலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உ.பி பார் கவுன்சிலின் முதல் பெண் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நண்பரும் சக வழக்கறிஞருமான மனீஷ் ஷர்மாவுக்கு இதில் உடன்பாடு இல்லாததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆக்ரா சிவில் நீதிமன்றத்துக்கு ஒரு வழக்கில் வாதாட சென்ற தர்வேஷ் யாதவை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார் மனீஷ் ஷர்மா. தொடர்ந்து மூன்று முறை சுட்டதால் சம்பவ இடத்திலேயே ரத்தம் வெளியேறி மயங்கி விழுந்தார் தர்வேஷ் யாதவ். பிறகு மனீஷ் தன்னை தானே சுட்டு கொண்டிருக்கிறார். உடனடியாக அருகில் இருந்த காவலர்கள் அவரை மடக்கி பிடித்தனர். எனினும் ஒரு குண்டு அவர் மார்பு தோள்பட்டையில் ஆழமாக பாய்ந்துவிட்டது. இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் போலீஸ்.

தர்வேஷ் யாதவ் இறந்து விட்ட நிலையில் மனீஷ் ஷர்மா மட்டும் அவசர சிகிச்சை பகுதியில் உயிருக்கு போராடி வருகிறார். அவர் பிழைத்தால்தான் ஏன் ஹர்வேஷ் ஆதவை கொலை செய்தார் என்பது தெரியவரும். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்