2017ல் உத்தர பிரதேச முதல்வராக பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத் பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்தார். அதில் ஒன்றுதான் இந்த அன்டி-ரோமியோ படை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் புரிவோரை உடனடியாக பிடித்து சட்டத்தின் படி தண்டனை வழங்குவதற்காக இந்த படையை அவர் உருவாக்கினார். ஆனால் இந்த படையால் காதலர்கள் சிலர் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. அதைதாண்டி பல வித கண்டனங்களும் எழுந்ததால் அந்த திட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை உத்தர பிரதேசத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது. மோடிக்கு ஒரு குஜராத் போல, யோகிக்கு உத்தர பிரதேசம். எனவே அதன் சட்ட திட்டங்களில், ஒழுங்கு நடவடிக்கைகளில் அதிகம் கவனம் செலுத்துகிறார். எனவே தற்போது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை குறைக்கவும், அதில் ஈடுபடுவோரை தண்டிக்கவும் மீண்டும் ஆன்டி-ரோமியோ படையை செயல்படுத்த போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.