போலி எஸ்பிஐ வங்கி தொடங்கி லட்சக்கணக்கில் மோசடி.. 4 இளைஞர்களிடம் விசாரணை..!

Siva
வியாழன், 3 அக்டோபர் 2024 (18:08 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தில் போலியாக எஸ்பிஐ வங்கி தொடங்கி இலட்சக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சபோரா என்ற கிராமத்தில் செப்டம்பர் 18ஆம் தேதி எஸ்பிஐ வங்கி தொடங்கப்பட்ட நிலையில், இந்த வங்கி அசல் வங்கி போலவே கிளை மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட பதவிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. 
 
இந்த வங்கியில் பல புதிய அக்கவுண்ட் ஓபன் செய்ததாகவும், அதுமட்டுமின்றி சிலர் நகை கடன் வாங்கியதாகவும் தெரிகிறது. மேலும், இந்த வங்கியில் வேலைக்கு சேர்ந்த சிலர் 2 லட்சம் முதல் 6 லட்சம் வரை லஞ்சம் கொடுத்து பணிக்கு சேர்ந்ததாகவும், அவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் சம்பளம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டதாகவும் தெரிகிறது.
 
இந்த நிலையில், எஸ்பிஐ வங்கியின் ஊழியர் ஒருவர், இந்த வங்கி போலியானது போல் இருப்பதாக காவல் துறையில் புகார் அளித்த நிலையில், காவல்துறை அதிரடியாக சோதனை செய்தபோது, இந்த வங்கி போலி என்பது தெரிய வந்தது. 
 
இதனை அடுத்து, போலி வங்கியின் மேலாளர் உள்பட நான்கு இளைஞர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அக்கவுண்ட் ஓபன் செய்தவர்கள், நகை கடன் வாங்கியவர்கள் பெரும் சிக்கலில் இருப்பதாகவும், அதைவிட, இந்த வங்கியில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வேலையில் சேர்ந்தவர்கள் சட்ட சிக்கலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்