ஜியோவின் பங்குகளை வாங்கிய பேஸ்புக்: இந்தியாவில் கால் பதிக்கும் ஸூக்கர்பெர்க்

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (08:46 IST)
இந்தியாவின் பிரபல செல்போன் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் பங்குகளை வாங்கி பங்குதாரராக மாறியிருக்கிறது ஃபேஸ்புக்.

நிலையன்ஸ் குழுமத்தின் தொலைதொடர்பு சேவை நிறுவனமான ஜியோ இந்தியா முழுவதும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை பேஸ்புக் வாங்குவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஜியோவின் 9.99% பங்குகளை 5.7 பில்லியன் டாலர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. அதவாது இந்திய மதிப்பின்படி 43,574 கோடி ரூபாய்க்கு இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேசியுள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் இதன்மூலம் ஜியோ நிறுவனத்தின் செயல்பாடுகளோடு பேஸ்புக் நிறுவன சேவைகளையும் இணைத்து மக்களுக்கு எளிய முறையில் சில சேவைகள் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்